பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் பொது வெளியில் கொட்டி குப்பைகளை கொளுத்துவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு நோய் பரவும் அபாயம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி 33 வார்டுகளை உள்ளடக்கியது, 33 வார்டுகளிலும் தனியார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பிரித்து குப்பைகளை அள்ளி வருகின்றனர். இவர்களால் சேகரிக்கப்படும் குப்பைகள் பண்ணவையில் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி அங்கிருந்து தரம் பிரித்து எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் பண்ண வயல் சாலை குப்பை கிடங்கு புறநகர் பகுதியில் இருப்பதால் அங்கே செல்வதற்கு சோம்பல் பட்டுக்கொண்டு, நகராட்சி தூய்மை பணியாளர்கள் ராஜா மடம் கல்லணை கால்வாய் மற்றும் கல்லணை கால்வாய் கரைப்பகுதிகள் சந்தைப்பேட்டை பகுதி மற்றும் முருகையா தியேட்டர் ஆற்றங்கரை பகுதிகளில், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளையும் கொட்டி கொளுத்துவதால், ஏற்படும் புகை மூட்டத்தால் குடியிருப்பு பகுதிகளில் உள்ளவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, சிறு குழந்தைகள் மற்றும் நோயாளிகள் முதியவர்கள் என அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
நகராட்சி ஆணையரௌ கவனத்திற்கு கொண்டு சென்றும், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. முன்பெல்லாம் மாதத்திற்கு ஒருமுறை நகராட்சி கூட்டம் நடந்த சூழ்நிலையில் மன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த பிரச்சனையை கவனத்தில் கொண்டு கூட்டத்தில் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
இப்பொழுதெல்லாம் மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு முறை கூட்டம் நடப்பதாலும், எதிர் தரப்பு உறுப்பினர்களின் கோரிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்படாத பட்சத்தில் நகராட்சியின் இதுபோன்ற அத்திமரர்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

