Skip to content

ஆகாஷ் மரண வழக்கு: ஆய்வாளர் உட்பட 6 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் 6 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் தீலிபன், உதவி ஆய்வாளர் குகன் ஆகியோரையும் காவலர்கள் தெய்வேந்திரன், சரத், மனோகரன், காளீஸ்வரன் ஆகியோரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார் (37), ஆதனூரைச் சேர்ந்த அழகர்சாமி (34) ஆகியோரை கடந்த 5ம் தேதி இரவு அரிவாளால் வெட்டியது தொடர்பாக, கிருஷ்ணராஜபுரம் காலனியை சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (26), குணா (23) ஆகியோரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.

இதில் போலீசாரை பார்த்ததும் ஆகாஷ் டெலிசன் தப்பி ஓட முயன்று தவறி விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆகாஷ் உயிரிழந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசார் தாக்கியதில் ஆகாஷ் இறந்ததாக கூறி அவரது பெற்றோர், உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மானாமதுரையில் கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆகாஷ் மரண வழக்கில் 6 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் தீலிபன், உதவி ஆய்வாளர் குகன் ஆகியோரையும் காவலர்கள் தெய்வேந்திரன், சரத், மனோகரன், காளீஸ்வரன் ஆகியோரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.

error: Content is protected !!