கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே ஜல்லிப்பட்டி பகுதியில் உள்ள ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கில், தனியார் பொறியியல் கல்லூரி (VSB) பேருந்து மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர். பல மாணவர்களுக்கு உடல் மற்றும் கை, கால்களில் பலத்த காயமடைந்தனர். விபத்து நடந்தவுடன் அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து காயமடைந்த மாணவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்பட்டதா அல்லது எதிர்பாராத விதமாக நடந்ததா என்பது குறித்து போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளில்லாத ரயில்வே கேட்டில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

