தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில்,
அரியலூரில் திடீரென ஒட்டப்பட்டுள்ள ‘एनडीए (என்.டி.ஏ – NDA) Vs தமிழ்நாடு என்ற சுவரொட்டிகள் ஒட்டுமொத்த மாவட்டத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் அரியலூரின் முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த சுவரொட்டியில் இடம்பெற்றுள்ள குறியீடுகள், ஒருபுறம் காவி நிறப் பின்னணியில் வெள்ளை

எழுத்துக்களில் ‘एनडीए (என்.டி.ஏ – NDA) என்ற வார்த்தை ஹிந்தி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது.
மறுபுறம் சிகப்பு நிறப் பின்னணியில் வெள்ளை எழுத்துக்களில் ‘தமிழ்நாடு’ என எழுதப்பட்டுள்ளது.
தமிழ்நாடு என்ற வார்த்தையின் அருகிலேயே, கருப்பு நிறத்தில் ‘உதயசூரியன்’ சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது.
மொழியை மையப்படுத்தி, நேரடி அரசியல் நிறங்கள் மற்றும் சின்னங்களுடன் வெளிவந்துள்ள இந்த அதிரடி சுவரொட்டிகள் வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பெரும் விவாதத்தை தூண்டியுள்ளன. அரியலூர் வட்டாரத்தில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

