தமிழகத்தில் அடுத்த மாதம் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது . இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் பரிசு, பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்புக்கு குழுவினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் மற்றும் பொருட்கள் கொண்டு சென்றால் அதற்குரிய உரிய ஆவணங்கள் இல்லாத போது அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சை தெற்கு வீதியில் பறக்கும்படை அதிகாரி சுரேஷ்குமார் தலைமையில் அதிகாரிகள், போலீசார் நேற்று இரவில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் ரூ.2.14 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நடத்திய விசாரணையில் மொத்த மருந்து விற்பனை ஏஜென்சி நிறுவனத்தில் இருந்து ரூ.2.14 லட்சம் ரொக்கம் வாகனத்தில் எடுத்து வைத்து கொண்டு செல்ல முயன்றதும் ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரிய வந்தது .
இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது .
