Skip to content

கரூரில் கோலம் மூலம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டுமென காவல்துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவகர் பஜார் பகுதியில், வட்டாட்சியர் அலுவலகம் சாலையில் அனைவரும் வாக்களி

ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கோலம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்வை தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் குமார் ஸ்ரீவத்சவா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் “100% வாக்களிப்போம்”, “வாக்களிப்பது கடமை”, “உங்கள் வாக்கு உங்கள் உரிமை” போன்ற

வாசகங்கள் கோலத்தில் வரைந்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதோடு, “ஏப்ரல் 23 – அனைவரும் வாக்களிப்போம்” என்ற வாசகத்துடன் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டிருந்தது.இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்து தேர்தல் விழிப்புணர்வை வெளிப்படுத்தினர்.

error: Content is protected !!