தென்னிந்தியாவிலேயே பொள்ளாச்சி மாட்டு சந்தை மிகப்பெரிய சந்தை ஆகும் இந்த மாட்டு சந்தையில் தமிழகம் மட்டுமல்லாது கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாடுகள் கொண்டுவரப்பட்டு விற்பனை நடைபெறும். தற்போது தமிழகத்தின் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் பண பரிவர்த்தனைக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு வழக்கமாக வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய வியாபாரிகள் தயக்கம் காட்டுவதாகவும்., தேர்தல் ஆணையம் எங்களைப் போன்ற வியாபாரிகளுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வழிவகை செய்தால் வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைவர். இந்த தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாட்டால் வாரம் தோறும் சுமார் 4 கோடி ரூபாய் வரை வர்த்தக இழப்பு ஏற்படுவதாகவும் மேலும் ஒரு மாத காலம் இந்த நிலை நீடித்தால் வியாபாரிகளும் கால்நடை வளர்ப்பவர்களும் நடு ரோட்டிற்கு தள்ளப்படுபவார்கள் என்றும் அச்சம் தெரிவித்தனர். இதற்கு கால்நடைகளை விற்க வரும் விவசாயிகளுக்கு அந்தந்த பகுதி காவல் நிலையத்திலிருந்து அனுமதி கடிதம் பெற்று வரும் பட்சத்தில் தாங்கள் கொண்டு செல்லும் பணத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
