Skip to content

ரம்ஜான் பண்டிகை… கரூர் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளப்பட்டி ஈத்கா மைதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 30 நாட்கள் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து அல்லாவை மனம் உருகி வழிபடுவர்.

நோன்பின் முடிவில் ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் அதிகம் இஸ்லாமியர்கள் வாழக்கூடிய பள்ளப்பட்டி பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

தொழுகைக்கு பிறகு இஸ்லாமிய மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனர்.

உற்றார், உறவினர், நண்பர்களோடு தங்கள் அன்பையும் சந்தோஷத்தையும் பகிர்ந்து கொண்டு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

error: Content is protected !!