Skip to content

ஜெயங்கொண்டம்… சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல்

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, சரி பார்க்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டன. உடையார்பாளையம்

கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பெட்டக அறைக்கு மின்னணு இயந்திரங்களை ஊழியர்கள் பாதுகாப்பாக கொண்டு சென்றனர். ஜெயங்கொண்டம் சட்டமன்ற

தொகுதிக்குட்பட்ட 320 வாக்குச்சாவடிங்களுக்கான பெட்டிகள் மற்றும் கூடுதலாக 20 சதவீத பெட்டிகள் கொண்டுவரப்பட்டு, அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பு பெட்டக அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் முடிவுற்று, வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட பின்னர், அவர்களின் பெயர்கள், சின்னங்கள் பதிவு செய்யப்படும் பொழுது இந்த இயந்திரங்கள் மீண்டும் எடுக்கப்பட்டு, அதில் வேட்பாளர் பட்டியல் பொருத்தம் பணி நடைபெற உள்ளது.

error: Content is protected !!