Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் திமுக சார்பில் கபடி போட்டி..

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி 22-வது வட்ட திமுக சார்பில் மாபெரும் கபடி போட்டியை முன்னாள் அமைச்சர்,சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 8-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்டம்,மேற்கு மாநகரம் வாமடம் பகுதியில் 22-வது வட்ட திமுக செயலாளர் வாமடம் சுரேஷ் ஏற்பாட்டில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியை கழக முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தி போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசு ரூபாய் 20,000, இரண்டாம் பரிசு ரூபாய் 15,000
மூன்றாம் பரிசு ரூபாய் 10,000, நான்காம் பரிசு ரூபாய் 7,000 வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவைகளை கே. என். நேரு வழங்கினார்..
இந்த நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன், முன்னாள் பகுதி செயலாளர் கண்ணன்,வட்ட பிரதிநிதி சுந்தர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கபடி போட்டிக்கான ஏற்பாடுகளை வட்டச் செயலாளர் வாமடம் சுரேஷ் செய்திருந்தார்

error: Content is protected !!