Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் 61,286 விதைப்பந்துகள் தயாரித்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை

கரூரில் உலக சாதனை நிகழ்வு: 1.33 மணி நேரத்தில் 61,286 விதைப்பந்துகள் தயாரித்த பள்ளி மாணவர்கள்: போரின் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும், உலக வன நாள் மற்றும் நீர் பாதுகாப்பு நாளை முன்னிட்டு, குறைந்து வரும் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தியும், கரூர் அருகே மண்மங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் உலக சாதனை நிகழ்ச்சி

நடைபெற்றது.

300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து இந்த நிகழ்வை நிகழ்த்தியுள்ளனர். சுமார் 800 கிலோ

களிமண் மற்றும் செம்மண் கலவையைக் கொண்டு, வேம்பு, புங்கன், மகிழம் உள்ளிட்ட 15 வகையான 85,000 நாட்டு வகை விதைகளைப் பயன்படுத்தி விதைப்பந்துகள் உருவாக்கினர்.

1 மணிநேரம் 33 நிமிடங்களில் 61,286 விதைப்பந்துகளை தயார் செய்து உலக வரைபடமாக அதனை

உருவாக்கி சாதனை புரிந்தனர். இந்த நிகழ்வு கிங்டம் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் உலக சாதனையாகப் பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

பள்ளி மாணவர்கள் இத்தகைய சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் முறை என்பது

குறிப்பிடத்தக்கது. சாதனை ஒருபுறம் இருக்க உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் நடக்கும் போர்களால் பாதிக்கப்படும் மக்களுக்காகவும், போர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாணவர்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

error: Content is protected !!