Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை குடியிருப்பில் 4 அடி கஞ்சா செடி…பீகார் தொழிலாளியிடம் விசாரணை

கோவையில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், வடவள்ளி அருகே உள்ள ஓணம்பாளையத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த பகுதியில் 4 அடி உயரம் கொண்ட கஞ்சா செடி கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​தொழில் நகரமான கோவையில், பீகார் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கிப் பணி புரிந்து வருகின்றனர். வடவள்ளி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட ஓணம்பாளையத்தில், சுமார் 40-க்கும் மேற்பட்ட பீகார் மாநிலக் குடும்பங்கள் தங்கி இருக்கும் குடியிருப்புகள் உள்ளன.

​இங்கு கஞ்சா செடி வளர்க்கப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, வடவள்ளி காவல் துறையினர் அந்த பகுதியில் அதிரடி சோதனை செய்தனர்.

அப்போது, குடியிருப்பின் அருகே சுமார் 4 அடி உயரம் வளர்ந்து இருந்த கஞ்சா செடியைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்தச் செடியைப் பறிமுதல் செய்த போலீசார், அந்தப் பகுதியில் தங்கி இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 40 இளைஞர்களைப் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். ​வணிக ரீதியாகவோ அல்லது சுய பயன்பாட்டிற்காகவோ இது வளர்க்கப்பட்டதா ? ​இந்த குடியிருப்புகளில் வேறு ஏதேனும் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா ? ​என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!