Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம் முழுவதும் ரூ.151 கோடி பணம், பொருள் பறிமுதல்

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, மாநிலம் முழுதும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 151 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்டின நாயர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு தமிழகம் முழுக்க ரூபாய் 151 கோடி மதிப்பிலான பணம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார். மேலும் இப்படி உரிய ஆவணங்கள் அற்ற முறையற்ற விதத்தில் பணங்களும் நகைகளும் பொருட்களும் இடம் மாற்றம் செய்வது தொடர்பாக இதுவரை தேர்தல் ஆணையத்திற்கு 794 புகார்கள் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார் மேலும் இதில் 20 புகார்கள் பரிசீலன் நிலையில் உள்ளதாகவும் மீதமுள் அனைத்து புகார்கள் மீதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

மேலும் புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தவரில் 50 சதவீத நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார் மேலும் மீதமுள்ளவர்களுக்கு தேர்தல் வாக்குப்பதிவியற்குள் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப் படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் மாநிலம் முழுக்க பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை கணக்கிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறிய அவர், தேர்தலில் வாக்கு பதிவு சதவீதத்தை அதிகப்படுத்துவதற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

error: Content is protected !!