Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக சட்டசபை தேர்தல்: அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு

கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில், அ.தி.மு.க. 179 தொகுதிகளில் போட்டியிட்டு 65 இடங்களிலும், பா.ம.க. 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களிலும், பா.ஜ.க. 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களிலும், புரட்சி பாரதம் ஒரு இடத்தில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றது. த.மா.கா. 6 தொகுதிகளிலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணி கழகம், பசும்பொன் தேசிய கழகம் ஆகியவை தலா 1 தொகுதிகளிலும் போட்டியிட்டபோதும் தோல்வியடைந்தன.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 3 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க.வுக்கு 27 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 18 தொகுதிகளும், அ.ம.மு.க.வுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது, பா.ஜ.க.வுக்கு 7 தொகுதிகள் அதிகம். அதே நேரத்தில், பா.ம.க.வுக்கு 5 தொகுதிகள் குறைவு. அதற்கு, பா.ம.க., டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி என்று இரண்டாக பிளவுபட்டதே காரணம் என்று சொல்லப்படுகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3, புதிய நீதிக்கட்சிக்கு 2, இந்திய ஜனநாயக கட்சிக்கு 2, புரட்சி பாரதம் கட்சிக்கு 1, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 1, பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. இன்று இரவுக்குள் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது. மீதமுள்ள 168 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட இருப்பதாக தெரிகிறது.

error: Content is protected !!