Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுவையில் செங்கோல் நீமமு கழகத்துடன் சசிகலாவின் புதிய கட்சி கூட்டணி

புதுச்சேரி: புதுச்சேரியில் செங்கோல் நீதி மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைத்துள்ளது. மங்கலம், பாகூர், ராஜ்பவன் உள்ளிட்ட 10 தொகுதிகளில் செநீமமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி தீர்மானத்தில்;

09.04.2026 அன்று நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும், செங்கோல் நீதி மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் இடையே இன்று (25.03.2026) ஏற்பட்ட ஒப்பந்தப்படி கீழ்கண்டவாறு செங்கோல் நீதி மக்கள் முன்னேற்றக் கழகம் 10 சட்டமன்ற தொகுதிகளிலும், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் நான்கு தொகுதிகளிலும் இணைந்து புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுகின்ற தொகுதிகள் விவரம்:

  1. நெட்டப்பாக்கம் (தனி)
  2. வில்லியனூர்
  3. உழவர்கரை
  4. இந்திரா நகர்

செங்கோல் நீதி மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுகின்ற தொகுதிகள் விவரம்:

1.மங்கலம்

  1. பாகூர்,
  2. திருபுவனை (தனி).
  3. ராஜ் பவன்,
  4. ஏம்பலம் (தனி).

6.உப்பளம்,

  1. உருளையன்பேட்டை.

8.திருநள்ளாறு.

9.காரைக்கால் வடக்கு.

  1. அரியாங்குப்பம்

என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!