Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பஸ் தீப்பிடித்து 10 பேர் பலி.. ஆந்திராவில் பரிதாபம்

ஆந்திராவின் மர்க்காபுரம் பகுதியில் தனியார் பஸ் -டிப்பர் லாரி நேருக்கு மோதி விபத்தானது. இதில் மோதிய வேகத்தில் பஸ் தீ பிடித்து எரிந்தது. அதிகாலை நேரம் என்பதால் பல பயணிகள் தூக்கத்தில் இருந்தனர். இதனால் அவர்களால் உடனடியாக வெளியே வர முடியவில்லை . விபத்து பற்றி தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.
இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக 10 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர். 25-க்கும் அதிகமானவர்கள் காயங்களுடன் தப்பி உள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிர் பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் பஸ் முழுவதும் எரிந்து எலும்பு கூடாக மாறியது. இச்சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!