திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாநகரப் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்தந்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சங்கலியாண்ட பு ரம் ராமமூர்த்தி நகர் அருகே கஞ்சா விற்ற இளையராஜா (437 என்ற சரித்திர பதிவேடு ரவுடியை பாலக்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது, அரியமங்கலம் பகுதியில் கஞ்சா விற்ற அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்த அப்துல்லா மனைவி சகிலா பானு ( 38 ) என்பவரை போலீசார் கைது செய்து ஜாமினில் விடுவித்தனர். அவரிடமிருந்து 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பாலக்கரை அருகே கஞ்சா விற்ற கன்டோன்மென்ட் கான்வென்ட் சாலையைச் சேர்ந்த பழனியப்பா (45) என்பவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்து ஜாமினில் விடுவித்தனர். அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

