மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் தாதிப்பூரைச் சேர்ந்த சுபம் ஷக்யா, கடந்த வெள்ளிக்கிழமை தனது குடும்பத்தினருடன் சீத்தலா மாதா கோவிலுக்குச் சென்றுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த எஸ்யூவி (SUV) கார் ஒன்று ஆட்டோ மீது பலமாக மோதியது.
இந்தக் கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த சுபம் ஷக்யா உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த மற்றவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளதோடு, விபத்துக்குள்ளான வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

