Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பீகாரின் நாலந்தா கோவில் கூட்ட நெரிசல்-8 பக்தர்கள் பலி

பீகார் ஷெரீஃபின் மக்ரா பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மா ஷீத்லா கோவிலில், செவ்வாய்க்கிழமை காலை பிரார்த்தனையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது எட்டு பக்தர்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, கட்டுக்கடங்காத கூட்டத்தால் இந்த நெரிசலும், கோவிலில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்ற உள்ளூர் மக்களின் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் பலர் தீவிர நிலையில் இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்.

error: Content is protected !!