Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னைக்கே சவால் விடும் திருச்சியில் வளர்ச்சி… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

2026 சட்டமன்றத் தேர்தலில் சூப்பர் ஸ்டாராக விளங்கிக் கொண்டிருக்கிறது திமுக தேர்தல் அறிக்கை: திருச்சியில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டார். திருச்சி உழவர் சந்தையில் முதல்வர் ஸ்டாலின் 9 வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரித்தார்.

திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது..
மண்ணச்சநல்லூர்- கதிரவன், திருவெறும்பூர் மகேஸ், லால்குடி பாரிவள்ளல், திருவரங்கம்- துரைராஜ், முசிறி கருணை ராஜா, மணப்பாறை அப்துல் சமதை, துறையூர், முசிறி, அறிவிக்கப்படாத துறையூர் தொகுதி காங்., வேட்பாளருக்கு ஆதரவாகவும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மீண்டும் அமைய வேண்டும். இந்த முறையும் திருச்சியில் திமுக 100 % வெற்றி. திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் ஏர்போர்ட்டை போல் இருப்பதாக வீடியோ போடுகிறார்கள். திருச்சி பகுதிக்கு அமைச்சர் ேக.என்.நேரு 9 கூட்டுக் குடிநீர் திட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார். விரைவில் காங்., வேட்பாளரை அன்பு சகோதரர் ராகுல் காந்தி வேட்பாளரை அறிவிப்பார்.ஆட்சிக்கு மீண்டும் வந்ததும் திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் டைடல் பார்க் திறக்கப்படும். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தவுடன் 3 மெகா திட்டங்களை திறந்துவைக்க உள்ளோம். காமராஜர் நூலகம், டைடல் பூங்கா , சூரியூரில் ஒலிம்பிக் அகாடமி விரைவில் திறந்துவைக்கப்படும். உங்களினன் நம்பிக்கையை நான் இன்று காப்பாற்றியுள்ளேன். சென்னைக்கே சவால் விடும் வகையில் திருச்சி வளர்ந்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை மற்ற மாநிலங்களும் தொடங்கியுள்ளன. தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முடக்க நினைத்தனர். சாதிக் கலவரம், பாஜக ஆளும் மாநிலங்களைப் போன்று மதக் கலவரம் இல்லை. சொல்வதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம். கலைஞரின் மகனான நான் சொன்ன வாக்குறுதிகளை மறக்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன் என்று இவ்வாறு பேசினார்.

error: Content is protected !!