Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி தவெக வேட்பாளருக்கு சிக்கல்..

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளவனூர் பகுதியில் ஒருவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பல லட்சம் பணம் பதுக்கி வைத்திருப்பதாக லால்குடி தாசில்தாரூம், தேர்தல் நடத்தும் அலுவலருமான தமிழ்ச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது உடனே அங்கு பறக்கும் படை விரைந்து சென்று சோதனையிட்டனர். இதில் கட்டு கட்டாக பணம் சிக்கியது.

பின்னர்,ரூ.10 லட்சத்துக்கு மேல் இருப்பது தெரிந்ததால், தேர்தல் அதிகாரி தமிழ்ச்செல்வன் வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு ரூ.50 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

உரிய ஆவணங்கள் இல்லாததால் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.பணத்துடன் சிக்கிக் கொண்டவர் தமிழக வெற்றி கழக வேட்பாளர் கு.ப. கிருஷ்ணனின் நெருங்கிய உறவினர் என கூறப்பட்டது. இந்த சம்பவம் லால்குடி தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் கு.ப.கிருஷ்ணன் சிக்குகிறார்.

error: Content is protected !!