தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் இரண்டாவது முறையாக முதலமைச்சராவது உறுதி பொள்ளாச்சி திமுக வேட்பாளர் நித்தியானந்தம்
பொள்ளாச்சி ஏப்ரல் 8
பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் நித்தியானந்தம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்
இந்திரா நகர், அண்ணா காலனி , நல்லப்பன் நகர் , ரத்தின விநாயகர் கோவில்
பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
அவருக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இதில் பொள்ளாச்சி வடக்கு நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் நகர மன்ற தலைவர் சியாமளா , மதிமுக மாவட்ட செயலாளர் செந்தில் ,விசிக மண்டல செயலாளர் பிரபு உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்…
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களும் போற்றும் திட்டமான காலை உணவு திட்டம்
இந்த திட்டம் தேர்தல் அறிக்கையில்லை இல்லை, மாணவர்களுக்கு ஓட்டுமில்லை இருப்பினும் மாணவர்களின் நலன் அக்கறை கொண்ட தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் காலை உணவு திட்டத்தை
துவக்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் மேலும் வரும் 2026 ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையில் எட்டாம் வகுப்பு வரை காலை உணவு திட்டத்தை விரிவு படுத்துவதாக கூறியுள்ளார் ஒரு குடும்பம் வாழ்வில் முன்னேற அடுத்த தலைமுறையினரான மாணவர்களிடம் உள்ளது அதனை அறிந்த தமிழக முதல்வர் பள்ளி படிப்பில் காலை உணவு திட்டம் ,தமிழ் புதல்வன் திட்டம் புதுமைப் பெண் திட்டம் மடிக்கணினி திட்டம் இப்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ஒரு குடும்பம் வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேறுத்திற்கும் சிறப்பாக செயல்படுத்தியவர் நமது முதல்வர் என்றார்.
