Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோயம்பள்ளி மேம்பாலம் ஆட்சி அமைந்த 2 மாதத்தில் திறக்கப்படும்- திமுக வேட்பாளர்

கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு 900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது மேலும் மேலப்பாளையம், கோயம்பள்ளி மேம்பாலம் ஆட்சி அமைந்த இரண்டு மாதத்தில் திறக்கப்படும் என கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் ராஜா பேட்டி.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற (தனி) தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடம் ராஜா நாள்தோறும் பொது மக்களை சந்தித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோயம்பள்ளி ஊராட்சியில் உள்ள வடக்கு செல்லிபாளையம், தெற்கு செல்லி பாளையம், ஆதிதிராவிடர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திமுக வேட்பாளரை அப்பகுதி பொதுமக்கள் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திமுக வேட்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது வேளாண் கல்லூரி சிப்காட் கொண்டுவரப்பட்டுள்ளது , செல்லும் இடம் எல்லாம் நல்ல வரவேற்பு உள்ளது.

மேலப்பாளையம், கோயம்பள்ளி இடையேயான மேம்பாலம் பொறுத்தவரை அரசியல் கால் புணர்ச்சி காரணமாக சில வழக்குகள் போடப்பட்டுள்ளது அதன் சட்ட ரீதியாக சந்தித்து செந்தில் பாலாஜி அவர்கள் அதனை நீக்கி உள்ளார் ஆட்சி அமைந்ததும் இரண்டு மாத காலத்தில் பாலம் திறந்து வைக்கப்படும், தற்போது கூட 11 கோடி ரூபாய் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி உறுதி எனக்கூறினார்.

error: Content is protected !!