2021 சட்டமன்ற தேர்தலில் நான்கு சட்டமன்ற தொகுதிகளையும் வென்றதைப் போல் 2026லும் மக்கள் ஆதரவுடன் உதயசூரியன் மாபெரும் வெற்றி பெறும் என கரூர் சட்டமன்ற திமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்.
கரூர் மாவட்டத்தில் தேர்தல் களம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் போட்டியிடும் தியாகராஜன் இன்று காதப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர், அருகம்பாளையம், காந்திநகர்,காமராஜ் நகர்7 அரசு தெரு மற்றும் பஞ்சமாதேவி ஊராட்சிக்குட்பட்ட கலைஞர் நகர், காமராஜ் நகர், கவுண்டன் புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
வேட்பாளரை ஆதரித்து செந்தில் பாலாஜியின் சகோதரரும் கரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான அசோக் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
திமுக வேட்பாளர் தியாகராஜன் மற்றும் அசோக் ஆகிய இருவருக்கும் ஆரத்தி எடுத்து பூக்கள் தூவி பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
திமுக வேட்பாளர் தியாகராஜன் பேசுகையில்: திமுக ஆட்சியில் மகளிர் உரிமை தொகை, காலை உணவு திட்டம், விடியல் பயணம் , பொங்கல் தொகுப்பு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது 2026 ஆட்சி அமைந்தால் 8000 மதிப்புள்ள டோக்கன் வழங்கப்பட உள்ளது என்று பல்வேறு திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார்.
கரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அசோக் பேசுகையில்:
அரவக்குறிச்சி தேர்தலில் 12 மந்திரிகளை வைத்து வேலை செய்த போது வெற்றி பெற்றவர் செந்தில் பாலாஜி குறிப்பாக அப்போதே 40,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் செந்தில் பாலாஜி, தொடர்ந்து கரூர் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெற்றார், செந்தில் பாலாஜி இல்லை கோவை சென்று விட்டார் தியாகராஜன் தான் வேட்பாளர் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று நீங்கள் கேட்கிறீர்கள் அப்போது நீங்கள் தான் பயந்து போய் விட்டீர்கள் 2021 தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் திமுக வென்றதைப் போல 2026லும் மக்கள் ஆதரவுடன் மாபெரும் வெற்றி பெறும் எனக்கூறினார்.
