திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பெண் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோர் பேட்டி அளித்துள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனங்கள் வலுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரக்குறைவான வார்த்தையில் கனிமொழியை பேசியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் என்றுகூட இல்லாமல் மூன்றாம் தர நிர்வாகி போல் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளார்.
தமிழக வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் சூழலில், தற்போதுதான் பிரச்சாரமே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து மக்களை சந்திக்க களத்திற்குச் சென்றுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து ஊர் ஊராக பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
கனிமொழியுடைய வழக்கு நிலுவையில் இருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு முடியவில்லை, இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு வேலை இல்லை என்கிறார். வேற எங்கே வேலை இருக்கிறது? வேலையாவது கொடுமா? நீயாவது கொடு? வாய் இருக்கிறது, நாக்கு இருக்கிறது என எதை வேண்டுமானாலும் பேசலாமா? நான் ஏற்கெனவே 195 சட்டமன்றத் தொகுதியில் நேரடியாக போய் மக்களை சந்தித்து எழுச்சி பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன். இதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மக்களுடைய செல்வாக்கை இழந்துவிட்டார்கள், அதனால் பதறுகிறார்கள். இந்த தேர்தலில் தோல்வி ஜுரம் திமுகவை ஒட்டிக்கொண்டது. அதனால் தான் இப்படிப்பட்ட வார்த்தைகளை எல்லாம் கக்கிக் கொண்டிருக்கிறார். கனிமொழி என்னை பற்றி நிறைய பேசியுள்ளார். அவரைப் பற்றி ஏன் பேச வேண்டும், செல்லாத காசை எல்லாம் பேசி என்ன பிரயோஜனம் என்று பேசியுள்ளார்.
அந்த கட்சியிலேயே அந்த அம்மாவுக்கு வேலை இல்லை. அந்த கட்சியில் அவரை யாராவது வைத்திருக்கிறார்களா? அந்த கட்சியில் இல்லாதபோதே அந்த அம்மா இந்த மாதிரி பேசுகிறார். பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தால் நாங்கள் என்ன அடிமையா? விருப்பப்பட்டால் கூட்டணி வைக்கிறோம், விருப்பம் இல்லையென்றால் கூட்டணி இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்கவில்லை.
ஒவ்வொரு கட்சியும் தேர்தல் வருகின்ற பொழுது நிறுத்தப்படுகின்ற வேட்பாளர் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் கூட்டணி அமைக்கிறோம். அதிமுக கட்சியில் யார் யாரெல்லாம் கூட்டணியில் இருந்தார்களா அவர்களெல்லாம் திமுக தலைமையில் போய் கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறார்கள். திமுக கூட்டணியில் யார் யாரெல்லாம் அங்கம் வைத்து தேர்தல் போட்டியிட்டார்களோ அவர்களெல்லாம் அதிமுகவில் இருக்கிறார்கள் எஎன்று கூறினார்.
இந்நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பெண் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசனும் தரம் தாழ்ந்து பேசுகின்றனர். பெண்களை இழிவுபடுத்தி பேசுவதை அதிமுகவினர் செயல்திட்டமாகவே வைத்துள்ளனர். பொதுவெளிக்கு வரும் பெண்களை அதிமுகவினர் தரம் தாழ்ந்து பேசுகின்றனர். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி குறித்து தரக்குறைவாக பேசி பழனிசாமி மன்னிப்புக் கேட்க வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள். ஒட்டுமொத்த பெண் சமூகத்தை இழிவுபடுத்தி பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் பெண் குறித்து தரம் தாழ்ந்து எடப்பாடியால் பேச முடிகிறது. தேர்தல் பரப்புரையில் தனிமனித தாக்குதல் இருக்கக் கூடாது.
