சூர்யா நடிப்பில் வெளியான ’கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் கடந்த 10 நாள்களில் மட்டும் ரூ.130 கோடியை வசூலித்துள்ளது. RJ பாலாஜி இயக்கியுள்ள இத்திரைப்படம் முதல்நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனத்தால் வசூலை குவிக்க தொடங்கியது. தற்போது உலகளவில் 290 கோடியை எட்டிய நிலையில் விரைவில் ரூ.300 கோடியை எட்ட உள்ளது. இதன்மூலம் முதல்முறையாக ₹300 கோடி வசூலிக்கும் சூர்யாவின் படம் என்ற பெருமையை கருப்பு பெற உள்ளது.
