மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் ஓசூர் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. கர்நாடகாவிலிருந்து தமிழ்நாடு நோக்கி வரும் பேருந்துகள் வழக்கம்போல இயங்கின. ஓசூர் – பெங்களூரு இடையே கன்னட அமைப்பினர் போராட்டம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பேருந்து சேவை பின்னர் மீண்டும் தொடங்கியது.
