Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார்…

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் சென்னை, சட்டக் கல்லூரி திருச்சியின் 3 வது பட்டமளிப்பு விழா
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது.
இவ்விழாவில்
தமிழக
எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணை வேந்தர்
சி டி ஆர் நிர்மல் குமார் விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நீட் தேர்வு தொடர்பான மாணவர் போராட்டங்களில் திமுக தேவையற்ற அரசியல் செய்கிறது.
சிலரை 100,
200 பணம் கொடுத்து திமுக டி-ஷர்ட் அணிவித்து போராட்டத்தில் அமர வைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார். “ஜென்சி” என்ற வார்த்தையை கூட சரியாக புரிந்துகொள்ளாமல் உதயநிதி பேச்சு உள்ளது. அமைச்சர்
உதயநிதி திமுகவை வழிநடத்தும் தகுதி தனக்கு உள்ளதா? என்பதை கட்சி நிர்வாகிகளிடம் வாக்கெடுப்பு நடத்தி தன்னை சுய பரிசோதனை கொள்ள வேண்டும்.
அண்ணா உருவாக்கிய திமுகவை வழிநடத்த கனிமொழி
அல்லது உதயநிதி
ஆகிய இருவரில் யாருக்கு தகுதி உள்ளது என்பதையும் நிர்வாகிகளிடம் கேட்க வேண்டும்.
மாணவர்களின் உணர்வு பூர்வமான போராட்டங்களை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தக் கூடாது.
தமிழக வெற்றிக் கழகம் நீட் தேர்வை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறது.
மாணவர் போராட்டங்களில் தவெக கட்சியினர் பங்கேற்றாலும் கட்சிக் கொடி, பேனர் அல்லது அரசியல் அடையாளங்களை பயன்படுத்தவில்லை.
மேகதாது அணை விவகாரத்தில்
தமிழக பொதுமக்கள், விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டு வருகிறோம். அதேபோன்று சட்ட வல்லுநர்களிடமும் ஆலோசித்து வருகிறோம். எனவே நல்ல முடிவை முதலமைச்சர் எடுப்பார்.
இதனை பேச்சுவார்த்தை மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ளலாம். அதே நேரத்தில், மேகதாது அணை விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதிக்கும் முழுமையான புரிதல் இல்லை கருணாநிதி ஆட்சிக்கால காவிரி ஒப்பந்த விவரங்கள் பற்றியும் அவர்களுக்கு தெரியாது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அரசியல்
விலகல்
குறித்து,
எழுப்பப்பட்ட கேள்விக்கு
அவர் மக்களுக்காக நீண்ட காலம் போராடிய மூத்த தலைவர். எனவே தனிப்பட்ட விஷயங்களில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறினார். முதல்வர் கர்நாடகம் செல்வது தொடர்பான முடிவை முதல்வர் அலுவலகமே அறிவிக்கும்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி நிறத்தில் பேருந்துகளை இயக்கும் எண்ணம் இல்லை. மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களிலேயே கவனம் செலுத்துகிறோம். “விசில்” சின்னம் உலகம் முழுவதும் மக்களிடம் சென்றடைந்துவிட்டதால், கட்சி சின்னத்தை விளம்பர
படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
ஜனநாயகன் திரைப்படம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்த படம் வெளியாக மூன்று ஆண்டுகள் பல்வேறு தடைகள் இருந்ததால், அதன் வெளியீடு உணர்வுபூர்வமான தருணமாக மாறியதாகவும், அதனால் சில அமைச்சர்கள் கண்கலங்கியது இயல்பானது.மேலும், நீண்டகாலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகள் விடுதலை தொடர்பாக மத்திய அரசின் ஒத்துழைப்புடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்

error: Content is protected !!