திருச்சி சுரங்க துறையில் உதவியாளராக பணிபுரிபவர் வின்சா. இவர் நேற்று திண்டுக்கல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மதி என்பவர் டிப்பர் லாரியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 4 யூனிட் மணல் திருடியது கண்டறியப்பட்டது. உடனே, திருமதி வின்சா எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்திற்கு கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
