திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருவெறும்பூரில் உள்ள OFT (படைக்கலன் தொழிற்சாலை) தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தொழிற்சாலை வாயிலில் திரண்டிருந்த தொழிலாளர்களிடையே உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை எடுத்துரைத்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு ‘உதயசூரியன்’ சின்னத்தில் வாக்களித்து, பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வின் போது, ஒன்றிய கழகச் செயலாளர்கள் கங்காதரன், , தொமுச (தொழிலாளர் முன்னேற்றச் சங்கம்) பொதுச்செயலாளர் கண்ணன், தலைவர் ரமேஷ், மற்றும் முக்கிய நிர்வாகிகளான
எம். சிவக்குமார், பிரேமானந்த், கேசவன், வசந்தகுமார், விஜயகுமார், மீனா மற்றும் கழக நிர்வாகிகள் சண்முகம், ஜெகதீசன், கயல்விழி, சுதாகர், உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர். உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
