நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளதை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகளின் கண்டனங்கள் குவிய தொடங்கியுள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழ் பிரச்சனையால் படம் வெளியாகவில்லை. இந்நிலையில் தேர்தலுக்கு பின் படம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்பட்டது. இதனிடையே நேற்று ஜனநாயகன் படம் இணைய தளங்களில் கசிந்தது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனை செய்தது தவெகவினர் தான் என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
