Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவில்பட்டியில் பணம் கேட்டு சிறுவனை கடத்தி தாக்கிய 4 பேர் கைது

கோவில்பட்டியில் பணம் கேட்டு சிறுவனை கடத்தி தாக்கிய 4 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகரில், வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த 16 வயது சிறுவனை 4 பேர் மிரட்டி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் பணம் கேட்டு சிறுவனை தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பி ஓடிய சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அந்த நபர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், யுவன் பாரத் (21), மாடசாமி (21), சூர்யா (19), ஆனந்த் (20) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!