Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பள்ளப்பட்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் காத்திருப்புப் போராட்டம்

பள்ளப்பட்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் காத்திருப்புப் போராட்டம்.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் திடீர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது ஒப்பந்த நிறுவனம் 1,500 ரூபாய் வழங்கிய நிலையில் இந்த ஆண்டு 1,000 ரூபாய் தருவதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே விலைவாசி உயர்வு காரணமாக குடும்பச் செலவுகளைச் சமாளிக்க சிரமப்பட்டு வரும் நிலையில், தீபாவளி போனஸ் தொகையையும் குறைத்து வழங்கியிருப்பது தங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, கடந்த ஆண்டை விட கூடுதல் போனஸ் 2,000 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டம் காரணமாக பள்ளப்பட்டி நகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!