சுதீஷ் தயாரித்து இயக்கும் ‘வாண வேடிக்கை’ திரைப்படத்தில் சண்முக பாண்டியனுக்கு வில்லனாக முன்னணி இயக்குநர் மோகன் ராஜா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல வெற்றி படங்களை இயக்கிய மோகன் ராஜா, தற்போது இப்படத்தின் மூலம் நடிகராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளதால் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சிவானி ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் சண்முக பாண்டியன் மற்றும் மோகன் ராஜா இடையே இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சண்முக பாண்டியனின் ‘வாண வேடிக்கை’ பட வில்லன் இவரா?
