ஏர் இந்தியா விமானத்தில், 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட வெளிநாட்டவர் ஒருவர் மிகவும் குறுகலான கழிப்பறைக்குள் நுழையப் போராடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அந்த நபர் மிகவும் சிரமப்பட்டு, குனிந்தபடியும், பக்கவாட்டில் உடல் சுருங்கிய நிலையிலும் அந்தச் சிறிய கழிப்பறைக்குள் நுழைய முயற்சிப்பதை அந்த வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது. இந்த வீடியோவை அவரது மனைவி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
ஏர் இந்தியா கழிப்பறையில் நுழையத் திணறிய உயரமான பயணி!
