சித்திரை பெருவிழாவிற்கு முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலின் கொடியேற்றம் விமர்சியாக நடைபெற்றது. 18 நாள் நடைபெறும் நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகின்ற 27 தேதி நடைபெறுகிறது.
தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான 18 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். தொடர்ந்து 40 அடி உயர கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க விழா 100 அடி நீல கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக, கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் அடுத்த வரும் 27 தேதி காலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெறுகிறது.
