கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்கா பாளையம் கிராமத்தில் நரிக்குறவர் என மக்கள் 8 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதே பகுதியை சேர்ந்த வெள்ளிமணி கடந்த 2008 ஆம் ஆண்டு ஜஸ்டின் சுந்தர் சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வெள்ளிமணி உறவினர் விஜயகுமார் என்பவர் தங்கள் இன மக்களுடன் உங்களை சேர்க்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலையத்தில் இரு தரப்பிலும் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு விஜயகுமார் மற்றும் வெள்ளிமணி குடும்பத்தாருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து குடும்பத்துடன் ஜஸ்டின் சுந்தர் சிங் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து போலீசார் விசாரணை செய்து கொண்டு இருந்த பொழுது திடீரென கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் கேனில் இருந்த டீசலை தலையில் ஊற்றி தற்கொலை முயற்சி ஈடுபட்டனர். காவல்துறையினர் டீசல் கேன் பறிமுதல் செய்து தாசில்தார் மற்றும் தாலுகா காவல் நிலைய போலீசார் சமாதானம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
பொள்ளாச்சியில் நரிக்குறவர் பெண்கள் தீக்குளிக்க முயற்சி…பரபரப்பு
