தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது..
இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் மனிதநேய மக்கள் கட்சியின்
மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது போட்டியிடுகிறார்
திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, வையம்பட்டி ஒன்றியபகுதிகளில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அப்துல் சமது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். ஆனாங்கரைப்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது அங்கிருந்த மக்கள் சிலர் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி முறையிட்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர் திடீரென சாலை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, ஜெயிச்சுட்டு போய் 5 வருடமா செஞ்சு தரவில்லை என்று கூறி வேட்பாளர் அப்துல் சமது காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.