அரியலூர் – தற்போது உள்ள நிலையில் தொகுதி மறு வரை செய்தால் வட மாநிலத்தவர்கள் முதல் தர குடிமக்களாகவும் தென்மாநிலத்தவர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவும் கருதும் சூழலை பாஜக உருவாக்கும்
தென் மாநிலங்களைப் பற்றி பாஜக ஒருபோதும் கவலைப்படாது
தொகுதி மறு வரை சட்ட மசோதாவை மட்டும் கொண்டு வந்தால் எதிர்ப்பு வரும் என்ற காரணத்தாலேயே மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவையும் பாஜக கொண்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு
அரியலூர் அண்ணா சிலை அருகில் மத்திய பாஜக அரசு இன்று நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவறை மசோதா தாக்கல் செய்யப்படுவதை கண்டித்து மாவட்ட திமுக சார்பில் கருப்பு கொடியேந்தி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் மத்திய அரசு

க்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் திமுகவில் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் மோடி தென் மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் தந்திரமாக சட்டமன்ற தேர்தல் நடக்கும் நிலையில் நாடாளுமன்றத்தை கூட்டி தொகுதி மறுவறை மசோதாவை நிறைவேற்ற முயற்சிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுரைத்தலின்படி அரியலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி தற்போது கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் தொகுதி மறுவறை சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்
தொகுதி மறுவறை மசோதாவை மட்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தால் எதிர்ப்பு வரும் என்ற காரணத்தாலேயே மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவையும் தந்திரமாக மத்திய பாஜக கொண்டு வந்துள்ளது. ஆனால் மகளிர் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம் தொகுதி மறு வரையை எதிர்க்கிறோம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளது. தென் மாநிலங்கள் அனைத்தும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளது ஆனால் வடமாநிலங்கள் மக்கள் தொகை கட்டுப்படுத்தவில்லை. இதன் மூலம் வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து ஆட்சிக்கு வந்து விடலாம் என பாஜக நினைக்கிறது. இதனால் எந்த காலத்திலும் தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் பிரதமராக முடியாது. தென் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படும். இதன் மூலம் வட மாநிலத்தவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுதான் நடக்கும். அதுதான் சட்டமாகும். நாம் எந்த விதத்திலும் தொகுதி மறு வரை செய்தால் வடமாநிலத்தவர்கள் முதல் தர குடிமக்கள் போலவும் தென் மாநிலத்தவர்கள் இரண்டாம் தர குடிமக்கள் போலவும் நடத்துவார்கள். தென் மாநிலங்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஆனால் தொகுதி மறு வரை பற்றி கவலைப்படாமல் அடிமை எடப்பாடி பழனிசாமி பேசி வருவது கண்டிக்கத்தக்கது. தொகுதி மறு வரை என்றால் என்ன என்பதை கூட தெரியாமல் கவலைப்படாமல் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி பாஜகவில் சேர்ந்து விடுவார் எனவும் குற்றம் சாட்டினார். ஒவ்வொரு மாநிலத்திலும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள பாஜக முயற்சி செய்கிறது. பீகாரில் நிதீஷ் குமாரை முதல்வர் முகமாக காட்டி ஆட்சி அமைந்த உடன் அவரை இறக்கிவிட்டு பாஜகவை சேர்ந்தவரை முதல்வராக்கி உள்ளனர் இதைத்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக செய்ய துடிக்கிறது. இதனால்தான் நமது முதல்வர் டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்குமான தேர்தல் என தொடர்ந்து சொல்லி வருகிறார் என கூறினார்.
