Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் தேவராட்டம் ஆடி வாக்காளரிடம் வாக்கு சேகரிப்பு

கரூர் அரவக்குறிச்சி சட்டமன்ற திமுக வேட்பாளர் இளங்கோ தேவராட்டம் ஆடி வாக்காளர் மத்தியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

வருகின்ற 23ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுவதை ஒட்டி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக இரண்டாவது முறையாக

இளங்கோ அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் இரவு, பகல் பாராமல் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் அவர் இன்று

ஈசநத்த ஊராட்சிக்குட்பட்ட ஆலமரத்துப்பட்டி பகுதியில் தேவராட்டம் ஆடி அங்குள்ள வாக்காளர் மத்தியில் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்பொழுது அவர் பேசிய போது கடந்த ஐந்து ஆண்டில் நமது பகுதிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளதாகவும் மீண்டும் விடுபட்ட பணிகள் வருகின்ற தேர்தலுக்குப் பிறகு என்னை சட்டமன்ற உறுப்பினர் ஆனால் தங்கள் பகுதியில் உள்ள ஏனைய நலத்திட்ட உதவிகளும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்காளர் மத்தியில் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ பேசினார்.

அதைத் தொடர்ந்து பல்வேறு கிராமங்களுக்கு சென்று தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

error: Content is protected !!