கேரளா: கோழிக்கோடு அருகே வனத்தை ஒட்டிய குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானையின் நெஞ்சகப் பகுதியில் இரும்புக் கம்பி குத்தியதில் அந்த யானை உயிரிழப்பு
நள்ளிரவில் கூட்டமாக வந்த யானைகளில் ஒரு யானை அங்கிருந்த கார் ஷெட்-ஐ தாக்கிய போது, பெரிய இரும்புக் கம்பி உடைந்து யானையின் உடலில் பலமாக தாக்கியுள்ளது. இதில் சரிந்து விழுந்து காட்டு யானை மீது கம்பி குத்தியதில் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
