Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குளித்தலையில் இளம் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த விசிக பிரமுகர் கைது

கரூர் மாவட்டம்,குளித்தலை மலையப்ப நகரை சேர்ந்த மனோகரன் மகன் பிரகாஷ் (40) இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட துணை செயலாளராக உள்ளார். இவர் குளித்தலை நகரப்பகுதியில் ஒரு வீட்டில் இளம்பெண் தனியாக இருந்த போது, அத்துமீறி வீட்டின் உள்ளே நுழைந்து பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றுள்ளார். அப்பெண் தள்ளிவிட்டு சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரைப் பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர் பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குளித்தலை போலீசார் பிரகாஷ் என்பவரை பிடித்து காவல் நிலையத்திற்க்கு அழைத்துச் சென்றனர். பிறகு இளம்பெண் அளித்த புகாரின் பேரில் பிரகாஷ் என்பவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர் இதனால் இச்சம்பவம் குளித்தலை பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

error: Content is protected !!