செவ்வாய் கிரகத்தில் அதீத நச்சு சூழலிலும் உயிரனங்கள் வாழ முடியும் என்ற வியக்கத்தக்க உண்மையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் விண்கல் மோதலால் ஏற்படும் அதிர்வுகள் மற்றும் நச்சுத்தன்மைகள் கொண்ட மண் ஆகியவற்றை செயற்கையாக உருவாக்கி நடத்தப்பட்ட சோதனையில் ஈஸ்ட் செல்கள் மற்றும் சில பாக்டீரியாக்கள் (Bacteria) உயிர் பிழைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தங்களை சுற்றி கவசத்தை உருவாக்கி ஆபத்துகளில் இருந்து பாதுகாத்து கொள்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வேற்று கிரங்கங்களில் உயிரினங்களை தேடும் முயற்சியில் இந்த ஆய்வு ஒரு மிகப்பெரிய திருப்புனையாக பார்க்கப்படுகிறது.
சமீபத்திய ஆய்வின்படி, ஆக்சிஜன் இல்லாத சூழல் மற்றும் அதிக கதிர்வீச்சு இருக்கும் இடங்களிலும் சில பாக்டீரியாக்கள் உயிர் பிழைக்கின்றன. இவை தங்கள் உடல் அமைப்பை மாற்றிக்கொள்வதன் மூலமோ அல்லது செயலற்ற நிலைக்கு செல்வதன் மூலமோ தங்களைப் பாதுகாத்துக்கொள்கின்றன. இதன்படி பார்த்தால் செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிரிகள் இருப்பதற்கான அல்லது ஒரு காலத்தில் இருந்ததற்கான வாய்ப்புகள் அதிகம். இது வேற்று கிரகங்களில் உயிரினங்களைத் தேடும் முயற்சிக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
