Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்திற்கு வந்தது பெருமையாக கருதுகிறேன்- பொன்னேரியில் ராகுல்

தமிழகத்திற்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன் என்று பொன்னேரி காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தமிழக மக்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியுள்ளேன். தமிழ்நாட்டு மக்களோடு எனது உறவு மேம்பட்டு இருக்கிறது. எனது இதயத்தில் தமிழக மக்களுக்கென்று தனி இடம் உண்டு. பொன்னேரியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பரப்புரை செய்து வருகிறார். இந்தியா என்பது பல மாநிலங்களின் ஒன்றியம்; ஒவ்வொரு மாநிலத்தின் குரலும் எதிரொலிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தங்கள் மொழி, கலாச்சாரத்தை காக்கும் உரிமை உள்ளது. நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை; ஆனால் தமிழ் மண்ணோடு நெருக்கமான உறவு உள்ளது. என்ன தைரியம் இருந்தால் தமிழ் மண், மொழி, கலாச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர் தாக்குவார்கள். இந்தியா என்கிற சிந்தனையை காப்பதற்காக மசோதாக்களை வீழ்த்தினோம் என்று பொன்னேரி பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

error: Content is protected !!