திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா மற்றும் தொட்டியம் தாலுகாவில் உள்ள வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறக்காததை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யா கண்ணு தலைமையில் முசிறி உதவி செயற் பொறியாளர் அலுவலகம் மற்றும் ஆறுகள் பாதுகாப்பு அலுவலகம் முன்பு திருச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாய சங்க மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள்மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்து தொட்டியம் போலீசார் அங்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய கடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
