Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2 வீடுகளில் ரூ.1 லட்சம் நகை,பணம் திருட்டு- திருச்சி க்ரைம்

2 வீடுகளில் ரூ 1 லட்சம் நகை,பணம் திருட்டு

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (57) இவர் இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் ஆலோசகராக உள்ளார். இந்நிலையில் கடந்த 16ந்தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற பாஸ்கர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சிடைந்தார். பிறகு வீட்டின் உள்ள சென்ற போது பீரோவை உடைத்து அதிலிருந்த தங்க மோதிரம்,தங்க கொக்கி மற்றும் வெள்ளி விளக்கு, பணம் 2 ஆயிரம் என ரூபாய் 21 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் பணம் திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசருக்கு பாஸ்கர் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சோதனை நடத்தினர்.

மற்றொரு வீட்டில் திருட்டு

இதே போன்று திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர் அல்லி தெருவை சேர்ந்தவன் சையது ஜெய்லானி இவரது மனைவி ஜமீன் பேகம் (வயது 59)இவர் கடந்த மார்ச் 28ந் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த 16ந்தேதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு
பீரோவில் இருந்த ரூ 50ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், பணம் ரூ3 ஆயிரம் என ரூ 76 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு போய் உள்ளது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து ஜமீன் பேகம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் இரண்டு சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த சம்பவத்தை பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கட்டிடத்தில் இருந்த எலக்ட்ரிக்கல் காப்பர் வயர் திருட்டு

திருச்சி ஏப்18 – திருச்சி உறையூர் ராமலிங்க நகர் 5வது தெருவை சேர்ந்தவர் அன்வர் அலி இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் புதிய கட்டிடத்தில் எலக்ட்ரிக்கல் காப்பர் வயர் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக காப்பர் வயர் அங்கு வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மர்ம ஆசாமிகள் யாரோ புதிய கட்டிடத்தில் நுழைந்து அங்கிருந்த எலக்ட்ரிக்கல் காப்பர் வயர்களை திருடிச் சென்று உள்ளனர். இவற்றின் மதிப்பு ரூபாய் 80 ஆயிரம் ஆகும்.இந்த சம்பவம் குறித்து அன்வர் அலி உறையூர் போலீஸ் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து எலக்ட்ரிக்கல் காப்பர் வயர்ரை திருடிய மர்ம
ஆசாமியை வலைவிசி தேடி வருகின்றனர்.

கூரையிலிருந்து தவறி விழுந்து ஆட்டோ டிரைவர் சாவு

திருச்சி உறையூர்நாயக்கர் பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், ஆட்டோ டிரைவர் இவர் நேற்று வீட்டின் கூரையில் ஏறி நின்று கொண்டு சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்றுமுருகேசன் மேலே இருந்து கீழே தவறி விழுந்தால் இந்த சம்பவத்தில் முருகேசனுக்கு மூக்கிலிருந்து ரத்தம் வடிந்தது இதை எடுத்து ஆபத்தான நிலையில் முருகேசனை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலுக்கு சென்ற வாலிபர் மாயம்

திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டயம்பேட்டை பேட்டை தாகூர் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 35) இவர் சற்று மனநிலை சரியில்லாதவர் இந்நிலையில் திருவனைக்காவல் கோவிலுக்கு சென்ற வினோத் குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது தந்தை யுவராஜ் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன வினோத் குமாரை தேடி வருகின்றனர்.

தனியார் மருத்துவமனை ஊழியர்மீது தாக்குதல்

திருச்சி தீரன் நகர் தங்கம் நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் சேகர் (67 ) இவர் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர். தற்பொழுது இவர் நாகமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தீரன் நகர் டீக்கடை அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்பொழுது சேகரின் நண்பர் நரசிம்மனின் மகன்தீரன் நகரை சேர்ந்த சிவகுமார் என்பவர் அங்கு வந்து சேகரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு சேகர் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த சிவகுமார் அங்கிருந்த கட்டையை எடுத்து சேகரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த சேகர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறரர்.இந்த சம்பவம் குறித்து சேகர் செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்

error: Content is protected !!