Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராகுல் வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் வாகனங்களில் அவர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனையில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. உரிய ஆவணம் ஏதும் இல்லாமல் ஏதேனும் பணம் எடுத்து செல்லப்பட்டால் அது பறிமுதல் செய்யப்படும்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள வந்திருந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்பகுதியில் ராகுல் காந்தி ஹெலிகாப்டர் தரையிறங்கியதும் அதில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். ராகுல்காந்தி வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தபோது ஆட்சேபனைக்குரிய பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

error: Content is protected !!