புதுமணத் தம்பதியை தனது பிரச்சார வாகனத்தில் ஏற்றி வாழ்த்து கூறிய தவெக தலைவர் விஜய்!
திருவள்ளூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது விஜய் தனது பிரச்சார வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் புதுமணத் தம்பதி ஒருவர் அவரைப் பார்க்கக் காத்திருந்தனர். இதைக் கவனித்த விஜய், உடனடியாக வாகனத்தை நிறுத்தச் சொல்லி, அந்தத் தம்பதியைத் தனது பிரச்சார வாகனத்தின் மீதே ஏற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
கூட்ட நெரிசலுக்கு மத்தியிலும் அந்தத் தம்பதியை அழைத்து, வாகனத்தின் மேல் ஏற்றி அருகில் அமரவைத்துப் பேசினார்.
தம்பதியினருக்கு சால்வை அணிவித்து, அவர்களுக்கு இனிமையான இல்லற வாழ்க்கை அமைய தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டது அந்தத் தம்பதிக்கு மறக்க முடியாத ஒரு தருணமாக அமைந்தது
