Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் ஸ்டாலின் 2வது முறையாக முதல்வராவது உறுதி… கோவி.செழியன்

ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைப்பதும், முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சராவதும் உறுதி என அமைச்சர் கோவி. செழியன் நம்பிக்கையுடன் தெரிவித்தார். திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளர் கோவி. செழியன் கடந்த மூன்று தேர்தல்களில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சாதனைகளை சொல்லியும் இந்த தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்தும் வாக்கு கேட்பதாக கூறினார்.

மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கே எங்கள் வாக்கு என தாய்மார்கள் கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது இன்னும் பெருமையோடு களத்தில் இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ யாக இருக்கிறேன். தொடர்ந்து இந்த முறையும் வெற்றி பெற்று சிட்டிங் எம்.எல்.ஏ ஆக களப் பணியாற்றுவேன். வெற்றி பெறுவது உறுதி என்று திமுக வேட்பாளர் கோவி. செழியன் கூறினார்.

error: Content is protected !!