Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் குடும்ப தகராறு.. மனைவியை கடப்பாரையால் அடித்து கொலை

தஞ்சாவூரில் குடும்பத் தகராறில் மனைவியை கடப்பாரையால் அடித்து கொலை செய்து விட்டு தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மேல அலங்கம் பகுதியை சேர்ந்தவர் வனபேச்சி (37). இவரது 3வது கணவர் சசிக்குமார் (48). இவர்கள் இருவரும் மலேசியாவில் வேலை பார்த்து வந்தனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 2021ம் ஆண்டு வனபேச்சியும், சசிக்குமாரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகளும், 9 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

மலேசியாவிலிருந்து இருவரும் தஞ்சைக்கு திரும்பி வந்து மேல அலங்கம் பகுதியில் வசித்து வந்தனர். சசிக்குமார் நிரந்தரமாக எந்த வேலைக்கும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி கணவன், மனைவிக்கு மத்தியில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து வனப்பேச்சி மேற்கு போலீசில் புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் வனப்பேச்சியும் அடிக்கடி வீட்டை விட்டு சென்று விட்டு 3 நாட்கள் கழித்துதான் வருவாராம்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக வனப்பேச்சி வீட்டிற்கு வரவில்லை. நேற்றுமுன்தினம் வீட்டிற்கு திரும்பிய வனப்பேச்சிக்கும், சசிக்குமாருக்கும் மத்தியில் மீண்டும் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் நேற்று அதிகாலை நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு தனது இரண்டு குழந்தைகளுடன் சசிக்குமார் சென்றுள்ளார். அங்கிருந்த தனது அண்ணியிடம் என் மனைவியை அடித்து கொலை செய்து விட்டேன். போலீசில் சரண் அடைந்து விடுவேன் என்று கூறிவிட்டு குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுள்ளார்.

மேலும் தனது அக்கா கணவரின் செல்போனிற்கு சசிக்குமார் ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில் என் மனைவியை கொலை செய்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார். இந்த வாய்ஸ் மெசேஜை கேட்டுவிட்டு அதிர்ச்சியடைந்த அக்கா கணவர் மற்றும் குடும்பத்தினர் சசிக்குமார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வனப்பேச்சி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

உடன் இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு டவுன் டிஎஸ்பி சோமசுந்தரம் மற்றும் மேற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் வனப்பேச்சியை கடப்பாரையால் சசிக்குமார் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் வனப்பேச்சியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தலைமறைவான சசிக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!